| ADDED : மார் 22, 2024 04:32 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இருவியாபாரிகளிடமிருந்து, ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.பரமக்குடியில் நேற்று வாரச்சந்தை நடந்த நிலையில், பனிக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்துள்ளார். அதிகாலை 5:00 மணிக்கு அண்டக்குடி விலக்கு ரோட்டில் தேர்தல் அலுவலர் கண்ணன், போலீஸ் எஸ்.ஐ., சண்முகவேல் தலைமையிலானோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. * எலிக்குளம் முத்துக் கண்ணன் என்பவர் ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்துள்ளார். அவரிடம் இருந்து கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. 1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் தாசில்தார் சாந்தியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காண்பித்தால் பணம் திருப்பித் தரப்படும் என, தாசில்தார் தெரிவித்தார்.