உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.1.80 கோடி போதை மாத்திரை பறிமுதல்

ரூ.1.80 கோடி போதை மாத்திரை பறிமுதல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தங்கம் கடத்த இருப்பதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. புதுமடம் அருகே வலங்காபுரி கடற்கரையில் நின்றிருந்த மினி சரக்கு வாகனத்தை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அதில் 'ப்ரிகாப்' என்ற நரம்பு வலி, சேதம், வலி நிவாரணியாக பயன்படும் மாத்திரைகள், 10 அட்டைப்பெட்டிகளில் 5 லட்சத்து 70 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தன. இதன் மதிப்பு 1.80 கோடி ரூபாய். இந்த மாத்திரைகள் போதைக்காக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது. கடத்தல் கும்பல் குறித்து சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை