உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய ரேஷன்கார்டு கேட்டு 300 பேர் காத்திருப்பு  

புதிய ரேஷன்கார்டு கேட்டு 300 பேர் காத்திருப்பு  

திருவாடானை, : திருவாடானை தாலுகாவில் 300க்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டுக்கு ஒரு ஆண்டாக காத்திருக்கின்றனர்.தமிழக அரசு ரேஷன் கார்டில் பெயர் உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்வு நடைபெற்றதால் கடந்த 2023 ஜூன் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் திருவாடானை தாலுகாவில் 300க்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன்கார்டு கேட்டு ஒரு ஆண்டாக காத்திருக்கின்றனர். ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி மாற்றங்கள் மட்டுமே பணிகள் நடக்கிறது. புதிய விண்ணப்பங்கள், பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒரு ஆண்டாகியும் ரேஷன்கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் மக்கள் விரக்தியுடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை