உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் முறைகேடு 4 பேர் சஸ்பெண்ட்

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் முறைகேடு 4 பேர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் அரிசி, மண்ணெண்ணெய் விநியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 விற்பனையாளர்கள், 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.பரமக்குடி தாலுகா விளத்துார் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன் கடையில் அரிசி பல கார்டுதாரர்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்த புகாரில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவில் வட்ட வழங்கல், கூட்டுறவுதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அரிசி வழங்கலில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விற்பனையாளர் ஜெனிட்டா மைக்கேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பரமக்குடியில் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்க கட்டுப்பாட்டில் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் செயல்படுகிறது.இங்குள்ள பணியாளர்கள் முத்து கணேசன், ராமமூர்த்தி விற்பனையில் முறைகேடு செய்தனர். இதே போல் நயினார்கோவில் சமத்துவபுரம் ரேஷன் கடையில் அரிசி கடத்தல் முறைகேடு தொடர்பாக விற்பனையாளர் தர்மராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை