உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 575 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

575 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே காரடர்ந்தகுடியில் மினி சரக்கு வேனில் கடத்தப்பட்ட 575 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி., விஜய் கார்த்திக்ராஜா உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.ஐ., மோகன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ., குமாரசாமி, ஏட்டு தேவேந்திரன் ஆகியோர் பரமக்குடி தாலுகா காரடர்ந்தகுடியில் நயினார்கோவில் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மினி சரக்கு வேனில் 23 மூடைகளில் கொண்டு செல்லப்பட்ட 575 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி மகன் கிேஷாரை 21, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை