உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் 736 பேருக்கு பட்டம்

செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் 736 பேருக்கு பட்டம்

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் 736 பேருக்கு காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் ஏ.செந்தில் ராஜன் பட்டங்களை வழங்கினார்.செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் சானாஸ் பரூக் அப்துல்லா, டாக்டர் ஹாரிஸ் அப்துல்லா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் ஏ.செந்தில்ராஜன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 7 பேர் தங்கப்பதக்கம், 46 பேர் பல்கலை தரமும் பெற்றிருந்தனர். 85 முதுகலை பட்டதாரிகளும், 651 இளங்கலை பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை