உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது இலங்கை கப்பல் மோதி படகு சேதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது இலங்கை கப்பல் மோதி படகு சேதம்

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள், ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவரின் படகு பலத்த சேதமடைந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 480 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், வழக்கம் போல, மீன்வளம் நிறைந்த இந்தியா - இலங்கை எல்லைப் பகுதியில் மீன் பிடித்தனர். அங்கு மூன்று ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், தங்கள் பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்து, படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஈசக் ராபின், செல்வகுமார் ஆகியோர் படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால், ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இரு படகையும் மடக்கிப்பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் சகாய ராபர்ட், 49, சேகர், 45, யாக்கோபு, 24, உள்ளிட்ட ஒன்பது பேரையும் கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு படகுடன் அழைத்துச் சென்றனர். பின், மீனவர்கள் மீது மீன் துறையினர் வழக்கு பதிந்து, ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.நடுக்கடலில் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை வீரர்கள், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மீனவர் ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் படகு மீது கப்பலைக் வேண்டுமென்றே மோதியதில் படகின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது.படகில் இருந்த ஆறு மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் ராமேஸ்வரம் கரை திரும்பினர். உடைந்த படகை சரி செய்ய, 2 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை