உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சாய்வுதளம் அமைக்க வழக்கு

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சாய்வுதளம் அமைக்க வழக்கு

மதுரை: ராமநாதபுரம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் தீரன் திருமுருகன். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ராமநாதபுரம் நீதிமன்ற வளாகம் 3-வது மாடியில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உள்ளது. விபத்துக்களில் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் நீதிமன்ற படிகளில் ஏறி விசாரணைக்கு செல்வதில் சிரமங்களை சந்திக்கின்றனர்.சாய்வுதள பாதை, லிப்ட் வசதி செய்யக்கோரி தமிழக சட்டத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு சட்டத்துறை, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலர்கள், ராமநாதபுரம் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை