உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிலம் விற்பதாக ரூ.10.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

நிலம் விற்பதாக ரூ.10.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நிலம் விற்பதாக கூறி ரூ.10.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி எஸ்.வி.,புரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் முகிலன் 34. இவருடைய நிலத்தை விற்பனை செய்வதாக ராமநாதபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் அனந்தகுமாரிடம் இருந்து ரூ.10.50 லட்சம் பெற்றிருந்தார். ஆனால் நிலத்தை எழுதி தரவில்லை. முகிலனிடம் பணத்தை கேட்டும் கொடுக்காததால் ராமநாதபுரம் பஜார் போலீசில் அனந்தகுமார்புகார் தெரிவித்தார். விசாரணையில் இதே இடத்தை பலரிடம் காட்டி விற்பனை செய்வதாக பல லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.முகிலன், மனைவி சந்தியா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் முகிலனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை