உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் நாய்களை பிடிக்காவிட்டால் 3000 போஸ்ட் கார்டுகள் அனுப்ப திட்டம் நகர் நலன் சார்ந்த கூட்டத்தில் தீர்மானம்

கீழக்கரையில் நாய்களை பிடிக்காவிட்டால் 3000 போஸ்ட் கார்டுகள் அனுப்ப திட்டம் நகர் நலன் சார்ந்த கூட்டத்தில் தீர்மானம்

கீழக்கரை: கீழக்கரையில் நாய்களை பிடிக்காவிட்டால் 3000 போஸ்ட் கார்டுகளை அனுப்ப நகர் நலன் சார்ந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வெறி நாய்களின் கடிக்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். தொல்லை தரும் நாய்களை பிடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.சமூக சமுதாய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்த கலந்தாய்வு கூட்டம் கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது. கீழக்கரை நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2800க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்துள்ளன.அவர்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த தகவல் கீழக்கரை அரசு மருத்துவமனை பொது தகவல் அலுவலரிடம் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளதாக விவாதிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நாய்களை பிடிக்காத நிலையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பொதுமக்கள் சார்பில் 3000 போஸ்ட் கார்டுகளை தலைமைச் செயலகத்திற்கு அனுப்ப உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை