உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசாள வந்த அம்மனுக்கு நான்காம் நாள் அபிஷேகம்

அரசாள வந்த அம்மனுக்கு நான்காம் நாள் அபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 30 ல் நடக்கிறது. இதையடுத்து ஜூலை 22-ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.தினமும் இரவில் மூலவர்களுக்கு 18 வகை அபிஷேகங்களும், சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும் நடக்கிறது. நேற்று நான்காம் நாளில் அரசாள வந்த அம்மன், துர்கை அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி