மேலும் செய்திகள்
வீட்டு கூரை அமைத்த போது மின்சாரம் தாக்கி இருவர் பலி
1 hour(s) ago
ரூ.4.67 கோடி தங்கம் பறிமுதல் இருவர் கைது
03-Oct-2025
விஜயதசமி விழாவில் வன்னிகா சூரன் வதம்
03-Oct-2025
ராமேஸ்வரம் கோயிலில் மகிஷாசூரன் வதம்
03-Oct-2025
கமுதி: கமுதி அருகே அபிராமம் பஸ்ஸ்டாண்டில் உயர்மின் கோபுரம் விளக்கு எரியாமல் இருப்பதால் இருளில் மூழ்கும் அவலநிலை உள்ளது.கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 40க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இங்கு கமுதி- பார்த்திபனுார் ரோடு வீரசோழன் செல்லும் விலக்கு ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு மக்கள் காத்திருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்கின்றனர்.இப்பகுதி மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிராமம் பேரூராட்சி சார்பில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது கடந்த சில நாட்களாக உயர்மின் கோபுர விளக்கு எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது.இதனால் பஸ்ஸ்டாண்டில் மக்கள் ஒருவித அச்சத்துடன் காத்திருக்கின்றனர். எனவே காட்சிப்பொருளாக இருக்கும் உயர்மின் கோபுர விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
1 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025