உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோஜ்மா நகர் கடற்கரையில் மண்ணரிப்பு தடுக்க நடவடிக்கை

ரோஜ்மா நகர் கடற்கரையில் மண்ணரிப்பு தடுக்க நடவடிக்கை

சாயல்குடி, : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கன்னிராஜபுரம் ரோஜ்மா நகரில் கடற்கரை மண்ணரிப்பு தடுக்க அலைத்தடுப்பு பாறாங்கற்கள் குறிப்பிட்ட தொலைவிற்கு அமைக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சி ரோஜ்மா நகரில் கடலின் பேரலைகளின் தாக்கத்தால் கரையோர கல்லறைத் தோட்டம் மண்ணரிப்பால் சேதடைவதால் கரையோரத்தில் எலும்புக்கூடுகள் மிதந்தன. பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே இப்பகுதியில் கடலோரத்தில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மீனவர்களின் கோரிக்கையாக தினமலர் நாளிதழில் கடந்த ஜூன் 7ல் படத்துடன் செய்தி வெளியானது.இதன் காரணமாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று ரோஜ்மா நகர் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் கூறியதாவது; கடலோரத்தில் மண்ணரிப்பை தடுக்கும் வகையில் அலைத்தடுப்பு பாறாங்கற்கள் குறிப்பிட்ட தொலைவிற்கு அமைக்கப்படும். விரைவில் அதற்கான பணிகள், திட்ட மதிப்பீடு செய்து தயார் நிலையில் உள்ளது. மீனவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.கடலாடி தாசில்தார் ரெங்கராஜ், ரோஜ்மா நகர் கிராம முக்கியஸ்தர்கள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஆரோக்கியம், ஒன்றிய குழு துணை தலைவர் ஆத்தி மற்றும் வருவாய்த் துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ