உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  விசாரணை மே 29க்கு தள்ளி வைப்பு 

நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  விசாரணை மே 29க்கு தள்ளி வைப்பு 

ராமநாதபுரம் : நடிகர் சீனிவாசன் மீதான ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில்அவர் ஆஜராகாத நிலையில் மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் மே 29க்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி 60. இறால் பண்ணை, உப்பளம்நடத்தி வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக வங்கியில் ரூ.15 கோடிகடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இதையறிந்த நடிகர் சீனிவாசன் தான் கடன் வாங்கி தருவதாகவும். அதற்கு ரூ.15 லட்சம் முத்திரை கட்டணம் செலுத்தவேண்டும் என முனியசாமியிடம் ரூ.15 லட்சம் வாங்கியுள்ளார். பணத்தை பெற்றவர் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.14 லட்சத்திற்கான கசோலையை முனியசாமியிடம் சீனிவாசன் வழங்கினார்.வங்கியில் பணம் இல்லையென செக் திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பாக முனிசாமி ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1 ல் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் நடிகர் சீனிவாசன் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. அதன் பின்பு சீனிவாசன் நீதிமன்றத்தில் சரணடைந்ததால் வழக்குதொடர்ந்து நடக்கிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையில் நடிகர் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் வழக்கை மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரனை மே 29க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை