உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று  2ம் போக சாகுபடி இழப்பை தவிர்க்கலாம் வேளாண்துறை அறிவுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று  2ம் போக சாகுபடி இழப்பை தவிர்க்கலாம் வேளாண்துறை அறிவுறுத்தல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்டார விவசாயிகள் இரண்டாம் போகமாக விளைந்த நெல்லை இடைத்தரகர்கள் வழியாக விற்றால் உரிய விலை கிடைப்பது இல்லை. எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று அதிக லாபம் பெறலாம்.இவ்வாண்டு 2ம் போகமாக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வசதிக்காக ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது 2 ம் போகமாக நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையுடன் நெல்லை 'சன்ன ரகம் குவிண்டால் ரூ.2310, பொது ரகம் குவிண்டால் ரூ.2265 விலைக்கு விற்கலாம். நெல் கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து பட்டா நகல் மற்றும் சிட்டா நகல், வி.ஏ.ஓ., சான்று பெற்று விபரங்களை www.tncs.edpc.in என்ற இணையதளத்தில் கொள்முதல் நிலைய பணியாளர்கள் உதவியுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். வங்கிக் கணக்கில் நேரடியாக நெல் கொள்முதலுக்கான பணம் செலுத்தப்படும். ராமநாதபுரம் வேளாண் உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், அச்சுந்தன்வயலில் இந்த ஆண்டு 2ம் போக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இடைத்தரகர்கள் வழியாக விற்றால் நெல்லுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.எனவே கூரியூர், புத்தேந்தல், சூரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று அதிக லாபம் பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி