உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்வள ஊட்டச்சத்து மேலாண்மையைகடைபிடிக்க வேளாண்துறை யோசனை

மண்வள ஊட்டச்சத்து மேலாண்மையைகடைபிடிக்க வேளாண்துறை யோசனை

ராமநாதபுரம், : மாவட்ட விவசாயிகள் பயிர்களில் அதிக விளைச்சலைப் பெறுவதற்கு மண்ணில் போதுமான அளவில் ஊட்டச்சத்து மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும் என வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கூறியிருப்பதாவது:விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறுவதற்காக செயற்கை உரங்கள், பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்ணின் இயற்கை வளம், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைகிறது.எனவே மண் வளத்தை பெருக்க பயிர் சுழற்சி முறை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுதல், பயிர்க் கழிவுகள், இதர வேளாண் கழிவுகள், அங்கக உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், மண்புழு உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் எண்ணெய் வித்துகளின் புண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.எனவே பயிர்களில் அதிக விளைச்சலைப் பெறுவதற்குமண்ணில் போதுமான அளவில் உயிர் சத்துக்களை நிலை நிறுத்துவதற்கும், இயற்பியல் குணங்களை மேம்படுத்த, அங்கக வேளாண் முறைகளைவிவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை