உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கமுதி : -கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992--93ம் ஆண்டில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.32 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வகுப்பறை, மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.பின் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவுப்பரிசு வழங்கினர்.முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை