உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம்செய்ததால் 8 வயது சிறுமிக்கு விருது

விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம்செய்ததால் 8 வயது சிறுமிக்கு விருது

திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடியை சேர்ந்த சிவபிரகாஷ் மகள் கானஸ்ரீ 8. விஸ்வாஸ் அமைப்பின் விருதான விஸ்வாஸ் யுவ புரஸ்கார் விருதை பெற்றுள்ளார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கானஸ்ரீ சிறப்பாக பாராயணம் செய்து வருகிறார்.கானஸ்ரீயின் திறமையையும், பக்தியையும் ஹிந்து சமயத்தின் பற்றையும் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள விஸ்வாஸ் அமைப்பு விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பெருமையையும் மகத்துவத்தையும் உலகின் 68 நாடுகளில் கொண்டு செல்லும் ஆன்மிக அமைப்பு.மழலையின் மொழியில் மாதவனின் நாமங்கள் என்ற தலைப்பில் விஸ்வாஸ் பள்ளி மாணவர்களுக்கு விஷ்ணு சகஸ்ர நாமத்தை கற்றுவித்து வருகின்றது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவின் போது விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சிறப்பாக பாராயணம் செய்தற்காக கானஸ்ரீக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கபட்டது.விஸ்வாஸ் நிறுவனர் ஸ்ரீதரன், விஸ்வாஸ் நிறுவன தலைமை ஆசிரியர் ராகவேந்திர ஷர்மா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் முரளி ஆகியோர் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு உறுப்பினர் சங்கர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை