உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறந்து கிடக்கும் சாக்கடையால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து 

திறந்து கிடக்கும் சாக்கடையால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து 

ராமநாதபுரம் : ராமநாதபுரம்- நயினார்கோவில் ரோடு வடக்கு புதுத்தெருவில் மூடப்படாமல் உள்ள சாக்கடையால் இரவில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து நயினார்கோவில் நெடுஞ் சாலையில் வடக்கு புதுத் தெரு பகுதியில் சாக்கடை கால்வாய்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய்களை மூடுவதற்கான சிலாப்புகள் தயார் நிலையில் உள்ளன.பணிகளை முழுமையாக முடிக்காததால் திறந்த வெளி கால்வாயாக உள்ளது. போதுமான தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவில் வாகன ஓட்டிகள் இருளில் சாக்கடையில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே நகராட்சி நிர்வாகத்தினர் சாக்கடையை சிலாப்புகளை பயன்படுத்தி மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி