| ADDED : ஜூன் 27, 2024 05:43 AM
ராமநாதபுரம், : சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை அருகே மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார். அதிகாரிகள், மாணவர்கள் பொதுமக்களுடன் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்தனர். போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரண்மனையில் துவங்கி நகரில் முக்கிய வீதிகளில்மாணவர்களின் ஊர்வலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரிவரை நடந்தது. ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கலால் உதவி ஆணையர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, தாசில்தார் சாமிநாதன், கோட்ட கள அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.* ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், மாவட்ட காவல் துறை சார்பில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., சந்தீஷ் தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமிவரவேற்றார். போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றி பேசினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நாகநாதன் நன்றி கூறினார்.