உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு  கடற்கரையில் துாய்மைப்படுத்தும் பணி 

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு  கடற்கரையில் துாய்மைப்படுத்தும் பணி 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் மதுரை காமராஜ் பல்கலையின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில் புதுமடம் கடற்கரையில் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ல் உலக பெருங்கடல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்கின்றனர். மதுரை காமராஜ் பல்கலை கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில் கடற்கரை துாய்மைப்படுத்தும் பணி பற்றிய விழிப்புணர்வு புதுமடம் கடற்கரையில் நடத்தப்பட்டது.மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினரான ஆற்றல் துறைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை தலைவர் ஆனந்த் வரவேற்றார்.மீன் வளப்பல்கலை மீன் வளர்ப்பு இயக்குனரகத்தின் உதவி பேராசிரியர் ஆனந்த், தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் உதவிப் பேராசிரியர் நுாருல் சம்சூன் மஹரிபா வாழ்த்தினார். தாசிம் பீவி அப்துல்காதர் கலை அறிவியல் கல்லுாரி, வேலு மனோகரன் கலை அறிவியல் கல்லுாரி, சேதுபதி அரசு கலை அறிவியல் கல்லுாரி, கடல் மற்றும் கடலோர ஆய்வுகள் துறை, எரிசக்தி அறிவியல் புலம் காமராஜ் பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர். கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள், ரேப்பர்கள், தெர்மோகோல், பஞ்சு போன்ற 80 சதவீதம் மனிதர்களால் கொட்டப்படும் குப்பை, புயல் வடிகால், சிற்றோடைகள் வழியாக கடலுக்குள் செல்கின்றன. சுற்றுலாப்பயணிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி கடற்கரை துாய்மையாக இருக்க உரிய அறிவுரைகளும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கீழக்கரை: கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கீழக்கரை நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, கணக்காளர்கள் தமிழ்செல்வன், உதயகுமார், நகராட்சி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடற்கரையோர பகுதிகளில் குப்பை அகற்றும் பணி நடந்தது.கடற்கரையோரம் குப்பை கொட்டுவதால் அவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு அரிய வகை உயிரினங்கள் பாதிப்பை சந்திப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி