உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் விழாவில் மாட்டு வண்டி பந்தயம்

கோயில் விழாவில் மாட்டு வண்டி பந்தயம்

கமுதி : கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அரியநாச்சி அம்மன் கோயில் எருதுகட்டு விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாடுகள், சாரதிகள் கலந்து கொண்டனர். பெரியமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகள், சாரதிகளுக்கு ரொக்கப்பரிசுகள், குத்துவிளக்கு கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ