மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
10 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
10 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
10 hour(s) ago
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் சரக்கு வாகனம் டூ-வீலரில் மோதியதில் இரு வாலிபர்கள் பலியாகினர். ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை சேதுநகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் தயாநிதி, 22. அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மகன் ராஜசூர்யா, 22, இருவரும் நண்பர்கள். ஒன்றாக பெயின்டர் வேலை செய்தனர்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தேவிபட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி இருவரும் டூ-வீலரில் வந்தனர்.ராஜசூர்யா டூ-வீலரை ஓட்டினார். பேராவூர் பேவர் பிளாக் தயாரிப்பு நிறுவனம் அருகே வந்த போது ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜசூர்யா, தயாநிதி பலத்த காயமடைந்தனர். இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தயாநிதி இறந்தார். ராஜசூர்யா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.கேணிக்கரை போலீசார், வாகன டிரைவர் சபரி மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago