உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓ.பி.எஸ்.,க்கு ஓட்டு போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவர் மீது வழக்கு

ஓ.பி.எஸ்.,க்கு ஓட்டு போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவர் மீது வழக்கு

ராமநாதபுரம்,: -ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காவாகுளத்தில் லோக்சபா தேர்தலின் போது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தில் ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ராமநாதபுரம் லோக்சபா தொகுதி முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கடலாடி அருகே காவாகுளத்தில் 304 வது ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு ஏப்., 19ல் நடந்தது. அதேபகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜகுமாரன் 27, அந்த ஓட்டுச்சாவடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஓட்டுப்பதிவு செய்ததை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கீழக்கிடாரம் வி.ஏ.ஓ., ஞானபாண்டி ராஜகுமாரன் மீது கீழச்செல்வனுார் போலீசில் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். ராஜகுமாரன் மீது எஸ்.ஐ., வீரபவானந்தம் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை