உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெட்ரோல் குண்டு வீச்சு 26 பேர் மீது வழக்கு பதிவு

பெட்ரோல் குண்டு வீச்சு 26 பேர் மீது வழக்கு பதிவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இரு பிரிவு இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் 7 இளைஞர்களை கைது செய்தனர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் நேற்று முன் தினம் பெட்ரோல் குண்டு வீசி இளைஞர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர். இப்பிரச்னை தொடர்பாக ஆர்.எஸ். மங்கலம் சாகிர் உசேன் தெருவை சேர்ந்த நசீராபானு 43, புகாரில், பெருமாள்மடையைச் சேர்ந்த சந்துரு 24, ஹேமநாதன் 23, வல்லமடை மகிம் 21, உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வல்லமடை மகிம் உட்பட 3 பேரை கைது செய்தனர்.இப்பிரச்னை தொடர்பாக பெருமாள்மடையைச் சேர்ந்த நிதிஷ்குமார் 25, புகாரில் ஆர்.எஸ்.மங்கலம் நடுத்தெரு ஆசிக் 24, நவ்புல் 23, சாகிர் உசேன் தெரு செய்யது முகமது புகாரி 19, உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் செய்யது முகமது புகாரி 19, பள்ளிவாசல் தெரு நிசாருதீன் 19, சாகிர் உசேன் தெரு அசன் இப்ராகிம் 38, உட்பட 4 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ