உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கமுதி,- கமுதி தாலுகா அலுவலகம் முன்பு காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.கமுதி அருகே கீழக்காஞ்சிரங்குளம் நீரேற்று நிலையத்திலிருந்து ராட்சத குழாய் மூலம் சாலையோரத்தில் குழாய் பதிக்கப்பட்டு கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கமுதி தாலுகா அலுவலகம் முன்பு காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.வீணாகும் தண்ணீர் ரோட்டோரத்தில் தேங்குகிறது. குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து இனிவரும் நாட்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை