உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  வழக்கு: ஏப்.30க்கு தள்ளிவைப்பு 

நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  வழக்கு: ஏப்.30க்கு தள்ளிவைப்பு 

ராமநாதபுரம் : செக்மோசடி வழக்கில் நடிகர் சீனிவாசன், சாட்சிகள் நேற்று ஆஜராகாததால் வழக்கு ஏப்.30க்கு தள்ளி வைக்கப்பட்டது. தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 55. இவர் வங்கி கடன் பெறுவதற்காக நடிகர் சீனிவாசனிடம் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். கடனை பெற்றுத்தராததால் கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பி கேட்டுள்ளார். சீனிவாசன் ரூ. 14 லட்சத்திற்கு வங்கி காசோலை வழங்கினார். வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதையடுத்து ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் மன்றம்-2ல் முனியசாமி வழக்கு தொடர்ந்தார். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு நடிகர் சீனிவாசன், சாட்சிகளும் ஆஜராகவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் சாட்சிகளை ரத்து செய்து, வழக்கறிஞர்கள் வாதத்திற்காக விசாரணையை ஏப்.30க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்