உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செல்லி அம்மன் பொங்கல் விழா

செல்லி அம்மன் பொங்கல் விழா

முதுகுளத்துார், : முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலுக்கு நகர் முக்குலத்தோர் உறவின்முறை சார்பில் பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். காந்தி சிலை அருகே உள்ள முளைக்கொட்டு திண்ணையில் தினந்தோறும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் வந்தனர். முருகன் கோயிலில் இருந்து பூத்தட்டு எடுத்து அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பொது பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.மூலவரான செல்லி அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர், திரவிய பொடி உட்பட் 21 வகை அபிஷேகம் நடந்தது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முக்கிய விதிகளில் முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை நகர் முக்குலத்தோர் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ