மேலும் செய்திகள்
வாஜ்பாய் பிறந்த நாள் விழா
22 hour(s) ago
மருத்துவ முகாமில் வசதியின்றி மாற்றுத் திறனாளிகள் அவதி
22 hour(s) ago
தர்மசாஸ்தா -புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
22 hour(s) ago
கிறிஸ்துமஸ் விழா
22 hour(s) ago
பரமக்குடி, மார்ச் 30--பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,13ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு ஏப்.,12 இரவு அனுக்ஞை, காப்பு கட்டுதல் நடக்கிறது.ஏப்.13 காலை 10:45 மணி முதல் சித்திரை திருவிழாவின் முன்னோட்டமாக கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட உள்ளது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகின்றனர். ஏப்.19 இரவு குதிரை வாகனத்தில் திக்விஜயம், மறுநாள் காலை கமல வாகனத்தில் அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளுவார்.அன்று மாலை ரிஷப வாகனத்தில் மாலை மாற்றுதல் நடக்கிறது. ஏப்.21 காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் விசாலாட்சி அம்பாள், சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு பட்டண பிரவேசம் நிறைவடைந்து மறுநாள் காலை 9:15 மணி முதல் ரத வீதிகளில் சித்திரை தேரோட்டம் நடக்கிறது.தொடர்ந்து ஏப்.23 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கம், மறு நாள் உற்ஸவ சாந்தி அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago