உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லாரி--சரக்கு வாகனம் விபத்தில் கிளீனர் பலி

லாரி--சரக்கு வாகனம் விபத்தில் கிளீனர் பலி

கமுதி: -கமுதி அருகே மேலராமநதி வளைவு ரோட்டில் லாரி எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் கிளீனர் பாண்டி 50, உயிரிழந்தார்.அருப்புக்கோட்டை கத்தாலம்பட்டி அருகே உள்ள கிரஷ்சரில் இருந்து உச்சிபுளியை சேர்ந்த டிரைவர் முனியசாமி லாரியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தார்.அப்போது கமுதி - -அருப்புக்கோட்டை ரோடு மேலராமநதி வளைவில் எதிரில் வந்த சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் சரக்கு வாகன டிரைவர் பாப்பாங்குடி அயன்ராஜ் 42, கிளீனர் சின்ன மூப்பன்பட்டி பாண்டி 50, பலத்த காயமடைந்தனர். இவர்களை கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாண்டி உயிரிழந்ததாக கூறினர்.அயன்ராஜ் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமுதி போலீசார் லாரி டிரைவர் உச்சிபுளி முனியசாமி மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை