உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆவணங்களை ஆய்வு செய்த கலெக்டர்

ஆவணங்களை ஆய்வு செய்த கலெக்டர்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்வில், கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆவணங்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜூன் 11 முதல், ஜமாபந்தி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடக்கிறது. நேற்று ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கருங்குடி, கூடலூர், கள்ளிக்குடி, பகவதி மங்கலம், ஏ.ஆர்.மங்கலம், கவ்வூர், பெத்தார் தேவன் கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம், புல்லமடை, ராமநாதமடை, இரட்டையூரணி, வில்லடிவாகை, ஓடைக்கால், குலமாணிக்கம் உள்ளிட்ட உள்ளிட்ட வருவாய் கிராம கணக்குகளை கலெக்டர் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி