உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்க அனுமதிக்க காங்.,கோரிக்கை

எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்க அனுமதிக்க காங்.,கோரிக்கை

திருவாடானை, - லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என காங்., கட்சியினர் வலியுறுத்தினர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்றைய தினமே எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்களும், ஊராட்சி ஒன்றிய தலைவர் அறைகளும் பூட்டப்பட்டு சாவி தாசில்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது.ஓட்டுப்பதிவு முடிந்தாலும் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4 ல் நடக்க உள்ளது. ஜூன் 6 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்து விட்டதால் எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது.இது குறித்து திருவாடானை வட்டார காங்.,கட்சியினர் கூறுகையில், மக்கள் பணி செய்வதற்கு ஏதுவாக எம்.எல்.ஏ., அலுவலக சாவியை தர வேண்டும் என்று உதவி தேர்தல் அலுவலரிடம் கேட்டோம். ஜூன் 6 க்கு பிறகு தான் சாவி தரப்படும் என்று கூறிவிட்டார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை