உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வங்கி அருகே ஓடும் கழிவுநீர் வாடிக்கையாளர்கள் அவதி

வங்கி அருகே ஓடும் கழிவுநீர் வாடிக்கையாளர்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி அருகே கழிவுநீர் தேங்கியுள்ளதால் வங்கிக்குள் செல்ல முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முறையாக பராமரிக்கப்படாமல் பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்தும், அடைப்புகள் ஏற்பட்டு சாக்கடை ரோட்டில் ஓடுகிறது.இதனை வாகனங்களில் உறிஞ்சி எடுப்பதும் நகராட்சியில் வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சாலைத்தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி அருகே கழிவுநீர் ரோட்டில் தேங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே உடனடியாக கழிவுநீரை சுத்தம் செய்து மீண்டும் தேங்காத வகையில் அடைப்பை நீக்கவும், சேதமடைந்த குழாய்களை மாற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை