உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் குழாய் சேதமடைந்து வீணாகும் நீர்: ரோடு சேதம்

குடிநீர் குழாய் சேதமடைந்து வீணாகும் நீர்: ரோடு சேதம்

திருவாடானை : திருவாடானை அருகே பண்ணவயலில் ரோட்டில் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகியது. பிற கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில் பண்ணவயல் அருகே குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது. அச்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. இதனால் மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை