உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழக மீனவர்கள்4 பேரை போதைப் பொருள் கடத்தியதாக கூறி அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. குவைத் சிறையில் உள்ள மோர்ப்பண்ணை சந்துரு 25, திருப்பாலைக்குடி சேசு 45, கார்த்திக் 25, பாசிப்பட்டினம் வினோத் குமார் 27, ஆகிய நான்கு மீனவர்களின் நிலைகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பம் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.இந்தநிலையில் கிழக்குகடற்கரை பகுதி மீனவர்கள்நேற்று முன் தினம் மோர்ப்பண்ணை கடல் பகுதியிலும், நேற்று திருப்பாலைக்குடி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச்சென்ற மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர்களை கைது செய்து அப்பாவி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் குவைத் நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை