உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம், : -தமிழர் தேசம் கட்சி சார்பில் பூரண மது விலக்கு அமல்படுத்தக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில செயலாளர் அழகர் தலைமை வகித்தார். வீரமுத்தரையர் முற்போக்கு சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் வரவேற்றார். மாநில பொருளாளர் சரவணன், மாவட்டத்தலைவர் செல்வம், மாவட்ட மகளிரணி செயலாளர் பாண்டியம்மாள், இளைஞரணி செயலாளர் அருண் செல்வகுமார், மாணவரணி செயலாளர் சதீஷ்குமார், ராமேஸ்வரம் நகர் இளைஞரணி செயலாளர் பாலமுருகன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படுவதில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை