உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதல்வர் மருந்தகம் திறப்பு விழா ரோட்டில் மேடையால் சிரமம்

முதல்வர் மருந்தகம் திறப்பு விழா ரோட்டில் மேடையால் சிரமம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவிற்காக ரோட்டை முழுமையாக ஆக்கிரமித்து மேடை அமைத்ததால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் அவ்வையார் தெருவில் முதல்வர் மருந்தகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தனர். தெருவில் தி.மு.க., கொடிகள் அதிகளவில் கட்டியிருந்தனர்.ரோட்டை முழுமையாக ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடிய வில்லை. மேலும் போலீசார் அரண்மனை ரோடு- அவ்வையார் ரோட்டில் தடுப்புகள் அமைத்து விழாவிற்கு வரும் வாகனங்களை மட்டும் அனுமதித்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி, திருவாடானை, முதுகுளத்துார், அபிராமம், ராமநாதபுரம், ஆனந்துார், கீழமுந்தல் திருவள்ளுவர் நகர், பரமக்குடி, பாம்பூர், திருவரங்கம் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. இங்கு மருந்துகள் 20 முதல் 90 சதவீதம் வரை மருந்துகளின் வகைக்கேற்ப குறைவான விலையில் விற்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் ஜுனு, துறை அதிகாரிகள், தி.மு.க., பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை