மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
5 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
5 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
5 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
5 hour(s) ago
ராமேஸ்வரம் : -ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் பல மின் விளக்குகள் பழுதாகி இருளில் மூழ்கி கிடப்பதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.பாலம் பராமரிப்பு பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.பாம்பன் கடல் மீது அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இப்பாலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணி செய்கிறது. அதன்படி 2023ல் ஏப்.,ல் ரூ.20 கோடி செலவில் சேதமடைந்த தடுப்பு சுவர், துாண்களில் உள்ள விரிசலை சரி செய்து வர்ணம் பூசி கடந்த ஜன., ல் புதுபித்தனர்.ஆனால் குளறுபடியான பராமரிப்பு பணியால் சமீபத்தில் பாலம் நடுவில் உள்ள பிங்கர் ஜாயின்ட் இரும்பு பிளேட் சேதமடைந்தது. மேலும் பாலத்தின் இருபுறமும் உள்ள 400 மின் விளக்குகளில் ஒருபகுதியில் 30 விளக்குகளை தவிர பிற விளக்குகள் பழுதாகி எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இருளில் விபத்து ஏற்பட்டு பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. என்வே பாலத்தில் ஒரு பகுதியில் உள்ள மின் விளக்குகளை ஒளிரச் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.---
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago