உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் பாம்பூரணி  குடியிருப்பில் சாக்கடை கலந்த குடி நீர் விநியோகம்  நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் பாம்பூரணி  குடியிருப்பில் சாக்கடை கலந்த குடி நீர் விநியோகம்  நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பாம்பூரணி பகுதியில் காவிரி கூட்டு குடிநீருடன் கழிவு நீர் வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதை பயன்படுத்தினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் நகராட்சி 32 வது வார்டில் பாம்பூரணி பகுதி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நான்கு நாட்கள், வாரத்திற்கு ஒரு முறை என குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால் அப்பகுதியினர் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை விநியோகிக்கப்பட்ட குடிநீரில் சாக்கடை கலந்து விநியோகம் செய்யப்பட்டது. அதன் பிறகும் நேரம் செல்ல செல்ல கலங்கலான சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நகராட்சி நிர்வாகம் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை