உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் கட்டண உயர்வு; பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு; பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பா.ஜ.,சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் மணிமாறன், கணபதி, நகராட்சி கவுன்சிலர் குமார், நகர் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மின் கட்டண உயர்வு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி