| ADDED : மே 24, 2024 02:23 AM
கீழக்கரை: -ஏர்வாடி தர்கா அருகே எந்த ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் இங்கிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.இங்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டிருந்தன. இக்கடைகளுக்கு அட்வான்ஸ் மற்றும் ரூ.300, 500 நாள் ஒன்றுக்கு வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதையடுத்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் தலைமையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கீழக்கரை சர்வேயர் வினோத்குமார், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் நவநீதகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வகணபதி, வி.ஏ.ஓ., மாரியப்பன் பங்கேற்றனர்.