உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் தேவை: மீனவர்கள் வலியுறுத்தல்

உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் தேவை: மீனவர்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தினர். கிழக்கு கடற்கரை சாலை, மோர்ப்பண்ணை, கடலுார், காரங்காடு, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள், நாட்டுப் படகுகளில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். நாட்டுப் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களை மீனவர்கள் வெளியூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் பல்வேறு கிராமங்களுக்கு அலைந்து திரிந்து முழுமையாக மீன்களை விற்க முடியாமல் மீனவர்கள் சிரமப்படுவதுடன் மீன்களின் தன்மையும் பாதிக்கப்படுகிறது.இதனால் இப்பகுதி மீனவர் கிராமங்களுக்கு மையப் பகுதியான உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை உடனுக்குடன் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.ஒரே இடத்தில் பலவகை மீன்கள் கிடைக்கும் என்பதால் பொதுமக்களும் எளிதாக தரமான மீன்களை குறைந்த விலையில் வாங்கும் நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ