உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதில்லை மத்திய அரசு மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

மீனவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதில்லை மத்திய அரசு மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்:-மீனவர்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்ப்பதில்லை என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் ஜேசுராஜ், ராயப்பன், எமரிட், சகாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ராமேஸ்வரம் மீனவர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினோம். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மீனவர்கள் சிறையில் இருக்கும் நாட்களில் அவரது குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வழங்கப்படுவதை ரூ.350 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பாம்பன் பாலத்தில் ஆற்று வாய்ப் பகுதியை துார் வார வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தையை துவங்கவும் கோரிக்கை விடுத்தோம். மீனவர்கள் விடுவிப்பு, பேச்சுவார்த்தை கோரிக்கையை தவிர மற்ற கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.மத்திய பா.ஜ., அரசு மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 படகுகளை இலங்கை அரசு விடுவித்த பிறகும் அவற்றை மீட்க மத்திய அரசு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தையை துவங்கவில்லை என்றனர். --ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, தி.மு.க., மீனவர் பிரிவு மாநில செயலாளர் ரவிச்சந்திர ராமவன்னி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை