உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கணவன்-மனைவியிடம் ரூ.8.80 லட்சம் மோசடி

கணவன்-மனைவியிடம் ரூ.8.80 லட்சம் மோசடி

ராமநாதபுரம்:ஆன் -லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை காட்டி ராமநாதபுரம் தம்பதியிடம் 8.80 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடுகின்றனர்.ராமநாதபுரம் தங்கப்பா நகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி 31. அலுமினிய கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி தமயந்தியின் அலைபேசி டெலிகிராம் செயலிக்கு 2 மாதங்களுக்கு முன் குறுந்தகவல் வந்தது.அதில் பிரபல ஓட்டல் நிறுவனம் பெயரில் ஆன்-லைன் மூலம் ஓட்டல் அறைகள் முன் பதிவு செய்து வீட்டிலிருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதற்கு தமயந்தி சம்மதம் தெரிவித்துள்ளார்.ஓட்டல் முன் பதிவு எவ்வாறு மேற்கொள்வது என ஓட்டல் பெயரில் இணையதள பக்கத்தில் முகவரி உருவாக்கி பதிவு செய்து பின் அறைகள் முன்பதிவு செய்து அதற்கு சிறந்த விமர்சனம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.தமயந்தியும் அவர்கள் கூறியபடி இணையதளத்தில் பக்கம் உருவாக்கி ஓட்டல் அறைகள் புக்கிங் செய்து விமர்சனம் செய்துள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கில் ரூ.700 செலுத்தியுள்ளனர். இந்த வேலை வாய்ப்பை கணவனும், மனைவியும் நம்பினர்.தமயந்திக்கு குறுந்தகவல் அனுப்பியவர் இணையதள முகவரியில் இன்னும் அதிக பணம் கட்டி விமர்சனம் செய்தால் அதிகளவு பணம் கிடைக்கும் என ஆசை காட்டினார். இதனை நம்பி ரூ.10 ஆயிரம் பணம் கட்டி விமர்சனம் செய்த போது இரு மடங்காக பணம் தமயந்தி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.இவ்வாறு தொடர்ந்து ரூ.8.80 லட்சம் பணம் கட்டியுள்ளனர். பணத்தை எடுக்க முடியாதபடி தொடர்ந்து அதிக பணம் கட்ட வலியுறுத்தினர். அதன் பிறகு பணத்தை திருப்பி எடுக்க முடியாததால் சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து ஓட்டலின் பெயரை இணையதளத்தில் தேடிய போது அந்த நிறுவனத்தின் பெயரில் தங்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து நாராயணமூர்த்தி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை