உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேரூராட்சியில் குப்பை அகற்றம்

பேரூராட்சியில் குப்பை அகற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் அகற்றப்படும் குப்பை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சவேரியார்பட்டணம் பகுதி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது. இங்கு குப்பை அதிகளவில் குவிந்ததால் மேலும் கொட்ட முடியாத வகையில் இட நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் குப்பை கிடங்கில் இட நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை வாகனங்களில் அள்ளி ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பகுதியில் தனியார் நிலத்தில் உள்ள பள்ளத்தில் கொட்டப்பட்டது.இதையடுத்து குப்பை குடங்கில் உள்ள குப்பை அகற்றப்பட்டதால் குப்பை கிடங்கில் இட நெருக்கடி குறைந்துள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ