உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்ட் இரும்பு துாணில் சிக்கிய அரசு விரைவு பஸ்

ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்ட் இரும்பு துாணில் சிக்கிய அரசு விரைவு பஸ்

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் சென்னை செல்வதற்காக வந்த அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் இரும்பு துாணில் சிக்கியதால் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேல் தவித்தனர்.கீழக்கரையில் இருந்து மாலை 5:00 மணிக்கு தினமும் சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.நேற்று மாலை கீழக்கரையில் இருந்து வந்த பஸ்சை பஸ் ஸ்டாண்ட் பகுதி கூரைக்குள் நிறுத்த டிரைவர் முயன்றார். அப்போது கூரையின் இரும்பு துாணில் உரசியபடி சிக்கியது. அதன் பிறகு பஸ்சும் ஸ்டார்ட் ஆகாமல் நின்றது. குறுக்காக நின்றதால் பஸ் ஸ்டாண்டில் மற்ற பஸ்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது. இந்த பஸ்சை மீட்க முடியாமல் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் பணியாளர்கள் சிரமப்பட்டனர். பஸ் முற்றிலும் இயங்காமல் நின்று போனதால் அந்த பஸ்சில் சென்னை பயணிக்க இருந்த பயணிகள் தவித்தனர். இதனால் அதன் பிறகு வந்த 6:45 மணி பஸ்சில் ஏற்றி அனுப்பினர். அதன் பிறகு இரவு 7:00 மணிக்கு ஒரு வழியாக பஸ் மீட்கப்பட்டது.நீண்ட துாரம் இயக்கப்படும் விரைவு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை