| ADDED : ஜூலை 16, 2024 05:53 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் நாடார் மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முகமது அஸ்பாக் காமராஜரின் அரசியல் பணியும் ஆட்சிப் பணியும் என்ற தலைப்பில் பேசி இரண்டாமிடம், இ.இசக்கி ராஜா உயர்நிலை பிரிவில் காலம் போற்றும் கர்மவீரர் காமராஜர் என்ற தலைப்பில் பேசி மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களுக்கு பிற்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரொக்கப்பரிசு, கேடயம் சான்றிதழ் வழங்கினார்.சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் ராஜு, ஆசிரியர் சதக் அப்துல்லா, பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், பெற்றோர் மக்கள் பாராட்டினர்.