உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுற்றுச்சுவர் சேதமடைந்த அரசு பள்ளி

சுற்றுச்சுவர் சேதமடைந்த அரசு பள்ளி

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே அலங்கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்து அறையும் குறையுமாக உள்ளது. முதுகுளத்துார் அருகே அலங்கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொசுக்குடி, பொசுக்குடிபட்டி, அலங்கானுார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இங்கு பள்ளி வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.பின்பு முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் கால்நடைகள் உலா வருவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் அதனை சுற்றி சீமைக்கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சுற்றுச்சுவர் மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ