உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள்  இன்று முதல்  ஜூன் 22 வரை வாயில் கூட்டம்

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள்  இன்று முதல்  ஜூன் 22 வரை வாயில் கூட்டம்

ராமநாதபுரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று (ஜூன் 11) முதல் 22 வரை வாயில் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோரிக்கைகளான வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 103 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளது.இதனை விளக்கி ஜூன் 11 முதல் 22 வரை அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு வாயில் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி