உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய பிரிவு துவங்க வேண்டும் தர்மர் எம்.பி., பேட்டி

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய பிரிவு துவங்க வேண்டும் தர்மர் எம்.பி., பேட்டி

முதுகுளத்துார் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சை பிரிவு துவங்க வேண்டும் என்று தர்மர் எம்.பி., வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு ரூ.154.84 கோடியில் 500 படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டது. இதில் நவீன லேப், விபத்து அவசர சிகிச்சை பிரிவு, முட நீக்கியல் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், ரத்த வங்கி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை பிரிவுகளுடன் கட்டட வசதிகள் உள்ளது.அதே நேரம் இங்கு தலைக்காயம் சிகிச்சை பிரிவு துவக்கப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து தினமும் ஏராளமானோர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.தினந்தோறும் ஏராளமானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் விபத்துக்கள் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்படும் போது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.அங்கு செல்லும் வழியில் பலர் உயிரிழந்து வருகின்றனர்​. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சை பிரிவு துவங்கி நவீன உபகரணங்களும் கூடிய அறுவை சிகிச்சை பிரிவு அமைக்கவும், டாக்டர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ